இந்த அலுவலகத்தின் பிரதான பணி, தொழில் புரிந்துகொண்டிருக்கும்போது விபத்துக்களுக்கு முகம்கொடுக்கின்ற வேலையாளர்களின் நட்டஈட்டுக் கோரிக்கையை விசாரணை செய்வதாகும். இதன் பெயரின் பிரகாரம் இது பொதுவான அரச திணைக்களம் போல் தோற்றினாலும் அதன் பணிகள் முழுமையாக நீதிமன்றம் சார்ந்தவையாகும். ஆணையாளர், மேலதிக ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோர் முழுநேர நீதிமன்ற அலுவலர்களாவர். வேலையாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகமானது அதனது கட்டளைகளை நிறைவேற்றுகையில், மாவட்ட நீதிமன்ற தத்துவங்கள் மற்றும் நீதவான் நீதிமன்ற தத்துவங்களென இரு வகையான தத்துவங்கள் அதற்கு உரித்தளிக்கப்பட்டுள்ளன.
தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு www.labourmin.gov.lk |
|
இலங்கை தொழில் திணைக்களம் www.labourdept.gov.lk |